கடைசி நொடியில் சுதாரித்த பைலட் - சென்னை ஏர்போர்ட்டில் தப்பிய 220 உயிர்கள்

x

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட தயாராக இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது. 220 பேருடன் இந்த விமானம் புறப்பட இருந்த நிலையில் விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபார்த்ததால் இந்த இயந்திர கோளாறு குறித்து கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பயணிக்க இருந்த 206 பயணிகளும், சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பழுது சரி செய்த பின் லண்டனுக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்