கடந்த, 2016 - ல் ஏற்பட்ட வர்தா புயல் மற்றும் அதன்பின் ஏற்பட்ட வறட்சியால், வண்டலூர் ஏரி பொலிவிழந்தது. சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட பூங்கா நிர்வாகத்தினர், பல்வேறு கட்டங்களாக அதனை தூர் வாரினர். இதனிடயே, பருவமழையால் ஏரியில் நீர் நிரம்பி தற்போது பச்சை பசேல் என இயற்கை எழிலுடன் காணப்படுகிறது . இதனால், பறவைகளின் வருகையும் தற்போது அதிகரித்துள்ளது. ஏராளமான நீர் பறவைகள் ஏரியில் உள்ள மரங்களில் அமர்ந்துள்ளது கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சியாக உள்ளது. இவற்றை, உயிரியல் பூங்காவிற்கு வரும், சுற்றுலாப் பயணிகள், பார்த்து ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.