Zero Accident Day விழிப்புணர்வு குறும்படம்-வன்முறை-பரபரப்பு

Zero Accident Day விழிப்புணர்வு குறும்படம்-வன்முறை-பரபரப்பு
Published on

சென்னையில் விபத்தில்லா நாளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் Zero Accident Day விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை, கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். Zero Accident Day துணிப்பை அறிமுகப்படுத்தப்பட்டது...

தொடர்ந்து போக்குவரத்து காவல்துறை சார்பாக திரையிடப்பட்ட விழிப்புணர்வு குறும்படத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணிப்போருக்கு உயிர் குறித்த அச்சத்தை ஏற்படுத்த முகமூடி அணிந்த இருவர் அரிவாள், இரும்புக் கம்பியால் தாக்க முற்பட்டு அறிவுரை வழங்குவதைப் போல் இடம்பெற்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது...

X

Thanthi TV
www.thanthitv.com