சினிமாவில் உதவி இயக்குநர் வாய்ப்பு தேடிய இளைஞர் தற்கொலை

சென்னையிலேயே உடலை அடக்கம் செய்யுமாறு எழுதி வைத்துவிட்டு பட்டதாரி இளைஞர் ஒருவர் நண்பர்களின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்​தியுள்ளது.
சினிமாவில் உதவி இயக்குநர் வாய்ப்பு தேடிய இளைஞர் தற்கொலை
Published on
அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகனான கவியரசு, விஷுவல் கம்யூனிகேஷன் படித்து விட்டு, சினிமாவில் உதவி இயக்குநர் வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்துள்ளார். சென்னை மதுரவாயல் பகுதியில் நண்பர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். நண்பர்கள் அனைவரும் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, உள்ளே பூட்டப்பட்ட நிலையில், கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த நண்பர்கள், கவியரசு, தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், தற்கொலை செய்து கொண்ட கவியரசு, வேலை கிடைக்காமலும், அவரது காதலி அண்மையில் இறந்ததாலும் மன உளைச்சலில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com