அக்காவை பார்க்கவிடாமல் தடுத்ததால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இளைஞர்

சென்னை அய்யப்பன் தாங்கலில் காவலாளியை மிரட்ட வானத்தை நோக்கி சுட்ட இளைஞரின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
அக்காவை பார்க்கவிடாமல் தடுத்ததால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இளைஞர்
Published on

கேரள மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பவர், தனது அக்காவை பார்க்க ஐயப்பன் தாங்கலில் உள்ள பங்களா குடியிருப்புக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த காவலாளி தீபக்கை உள்ளே அனுமதிக்காததால், ஆத்திரமடைந்த தீபக் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு விட்டு தப்பிச் சென்று விட்டார். இதனையடுத்து கேரளா சென்ற மாங்காடு போலீசார் அவர் மனநோய் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்ததையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவத்தன்று அவருடன் வந்த நண்பர் வினில்குமாரை கைது செய்து, சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com