Chennai Latest News| பாலியல் உறவுக்கு அழைத்து கத்திக்குத்து - அடையாளமே தெரியல.. சென்னை பெண் கதறல்
பாலியல் உறவுக்கு அழைத்து கத்திக்குத்து - அடையாளமே தெரியல.. சென்னை பெண் கதறல் #chennailatestnews #chennainews பாலியல் உறவுக்கு அழைத்து மாமூல் கேட்டு மிரட்டல் – இளம்பெண்ணை கத்தியால் குத்திய நபர் சென்னை அரும்பாக்கம் பகுதியில், இளம்பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்து, பின்னர் மாமூல் கேட்டு மிரட்டிய நபர், பணம் தர மறுத்ததால் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 31 வயது பெண்ணை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு பாலியல் உறவுக்கு வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பி அரும்பாக்கத்தில் உள்ள விடுதிக்கு சென்ற அந்த பெண், பின்னர் வெளியே வந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த நபர் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். பெண் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. காயமடைந்த பெண்ணை பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரும்பாக்கம் போலீசார், பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
