

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கும் நிலையில், அடுத்து வரவிருக்கும் கோடை காலத்தில், நீரின் தேவை பூர்த்தியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கோடையை சமாளிக்க முடியுமா? என்பதே பலரது சந்தேகமாக உள்ளது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வடிகால் வாரியம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பராம்பாக்கம் ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் நான்கு ஏரிகளிலும் ஆயிரத்து 417 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருந்த நிலையில், இந்த ஆண்டு தற்போது 5 ஆயிரத்து131 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக, சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால், பருவமழை தாமதமாக தொடங்கினாலும், சென்னையில் கோடையை சமாளிக்க முடியும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.