Chennai Villivakkam Drainage Issue | சென்னை வில்லிவாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை சாலையில் ஊற்றப்பட்ட கழிவுநீர் - பொதுமக்கள் அவதி
சென்னை வில்லிவாக்கத்தில் மழை நீர் வடிகாலில் தேங்கியிருந்த கழிவு நீரை மாநகராட்சி ஊழியர்கள் பள்ளிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் ஊற்றியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக மக்கள் புகார் எழுப்பிய நிலையில், கழிவு நீரை மின் மோட்டார் மூலம் இறைத்து சாலையிலேயே கொட்டியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். 3 பள்ளிகள் உள்ள சாலையில் துர்நாற்றத்துடன் கூடிய கழிவுநீரை ஊற்றியதால் நோய் பரவும் அபாயம் எற்பட்டுள்ளது...
Next Story
