இளம்பெண் இறப்பில் சந்தேகம் - சகோதரர் புகார்
இளம்பெண் இறப்பில் சந்தேகம் - சகோதரர் புகார்
- வண்ணாரப்பேட்டையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தனது தங்கையின் இறப்பில் சந்தேகமிருப்பதாக அவரது சகோதரர் புகாரளித்துள்ளார்.
- சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஶ்ரீரங்கமாள் தெருவில் வசித்து வரும் பிரகாஷ், 8 ஆண்டுகளாக கவிதா என்ற பெண்ணை காதலித்து, கடந்த 2022-ல் திருமணம் செய்து கொண்டார்.
- கடந்த 16-ம் தேதி, தனது தாயை செல்போனில் தொடர்புகொண்ட கவிதா, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
- தொடர்ந்து தூக்கிட்டு கவிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், தனது தங்கை இறப்பில் சந்தேகமிருப்பதாக அவரது சகோதரர் போலீசில் புகாரளித்துள்ளார்.
- மேலும், கவிதாவின் கணவர் பிரகாஷுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனை தட்டிக்கேட்ட தனது தங்கையை அவர் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
- இதனையடுத்து, தண்டையார்பேட்டை ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
