இடிந்து விழும் நிலையில் ரயில்வே மேம்பாலம் சுரங்கப்பாதை : கம்பிகள் அந்தரத்தில் தொங்கியபடி காட்சியளிக்கும் அவலம்

சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதி அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது.
இடிந்து விழும் நிலையில் ரயில்வே மேம்பாலம் சுரங்கப்பாதை : கம்பிகள் அந்தரத்தில் தொங்கியபடி காட்சியளிக்கும் அவலம்
Published on
சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதி அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலம் பழுதடைந்து கம்பிகள் அந்தரத்தில் தொங்குவதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக பாலத்தில் இருந்து கம்பிகள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்தப் பகுதியை கடந்து செல்லும் பயணிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையும், இதேபோல, பழுதடைந்து கம்பிகள் கீழே விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பாக இதை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com