ஆபாச பேச்சு..! கொலை மிரட்டல்..! வம்பு இழுத்த வட்டச் செயலாளர்.. ரவுண்டு கட்டிய கவுன்சிலர்

x

சென்னை வளசரவாக்கத்தில்... கவுன்சிலருக்கு வட்டச் செயலாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக வீடியோ பரப்பப்பட்ட விவகாரம் குறித்து வட்ட செயலாளர் விளக்கமளித்துள்ளார். வளசரவாக்கம் பாரதிதாசன் தெருவில் உள்ள கவுன்சிலர் பாரதிக்கும், வட்ட செயலாளர் சத்தியமூர்த்தியிக்கும் இடையே ஆற்காடு சாலையில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் உடற்பயிற்சி கூடம் கட்டியது குறித்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், தன்னை சத்தியமூர்த்தி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி பாரதி போலீசில் புகாரளித்த நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்