"உதயம் தியேட்டர்ல என் இதயத்தை தொலைச்சேன்"-இடிந்து நிற்கும் சினிமா ரசிகர்களின் கோட்டை |UdhayamTheatre
சென்னையின் பிரபலமான உதயம் திரையரங்கம் 40 ஆண்டுகள் கழித்து அடையாளம் இன்றி நிற்கிறது. சென்னை அசோக் நகரில் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம் உதயம், சந்திரன், சூரியன் என மூன்று திரைகளுடன் செயல்பட்டது. கார்பரேட் நிறுவனங்களால் மல்டிப்ளெக்ஸ் திரைகள் அறிமுகமாவதற்கு முன்னரே சென்னையில் 4 திரைகளுடன் சினிமா ரசிகர்களின் கோட்டையாக விளங்கியது. ஒவ்வொரு திரையிலும் சுமார் 700- க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ரசிக்கக்கூடிய வகையில் இந்தத் திரையரங்கம் இருந்து வந்தது. இருப்பினும் காலத்திற்கேற்றவாறு புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவரத் தவறியதாலும், திரையரங்க பங்கு தாரரர்களுக்குள் ஏற்பட்ட சொத்து பிரச்சனை காரணமாகவும் திரையரங்கின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின. இந்நிலையில் திரையரங்கத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்த நிலையில் திரையரங்கம் முழுவதுமாக இடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கு குடியிருப்பு கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளது.
