

பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு போக்குவரத்து கழக சேமநல ஊழியர்கள் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், கடந்த ஐந்து வருடங்களாக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வருவதாகவும், பணி நிரந்தரம் செய்வதாக கூறி ஒப்பந்த ஊழியர்களாகவே வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் தங்களுடன் பணியில் சேர்ந்த சிலரை மட்டும் பணி நிரந்தரம் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் இல்லையென்றால், பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.