ரயில்களில் கத்தி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது

சென்னையில் ரயில்களில் கத்தி முனையில் கொள்ளையடித்து வந்த நான்கு பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
ரயில்களில் கத்தி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது
Published on

சென்ட்ரலில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற ரயிலில் கத்தியை காட்டி மிரட்டி மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை, தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், சந்தேகப்படும்படியாக, திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் ஓடும் ரயிலில் ஏறி கொள்ளையடிப்பவர்கள் என்பதும், ஜெய்பூர் ரயில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 8 சவரன் நகை, பணம், செல்போன் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும், ஏற்கனவே மூன்று கொள்ளை, ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே எஸ்.பி மகேஸ்வரன், குற்றங்களை தடுக்க ரயில்கள் மெதுவாக செல்லும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com