"Obstruction Fine என்றால் என்ன ?" - காரணமில்லா அபராதம்.. கொதித்த நபர்.. கதறும் ஒட்டுநர்கள்

"Obstruction Fine என்றால் என்ன ?" - காரணமில்லா அபராதம்.. கொதித்த நபர்.. கதறும் ஒட்டுநர்கள்
Published on

சென்னையில், காரணமேதும் கூறாமல் போலீசார் அபராதம் விதிப்பதாக சரக்கு வாகன ஓட்டுநர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறார்.

சென்னையில், இதுபோன்று போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்து வருவதாகவும், ஆவணங்கள் முறைப்படி வைத்திருந்தாலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி போலீசார் அபராதம் விதிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து கேட்டால் போலீசார் முறையான விளக்கம் தரவில்லை எனக்கூறும் சரக்கு வாகன ஓட்டுநர் தமிழ்ச்செல்வம், இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றையும் அளித்திருக்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com