Chennai Traffic | Route | "இந்த பக்கம் போறீங்களா..?" - சென்னையில் திடீர் போக்குவரத்து மாற்றம்
Chennai Traffic | Route | "இந்த பக்கம் போறீங்களா..?" - சென்னையில் திடீர் போக்குவரத்து மாற்றம்
பீக் ஹவர்ஸ்... இன்று தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்
இன்று காலை 6 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை சென்னை தாம்பரம் பகுதியில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
ஜி.எஸ்.டி. சாலை, பல்லாவரம் - பம்மல் - குன்றத்தூர் சாலை, திருநீர்மலை சாலை, 200 அடி ரேடியல் ரோடு, தாம்பரம் வேளச்சேரி சாலை மற்றும் காந்தி ரோடு முடிச்சூர் சாலைகளில் பீக் ஹவர்ஸ் நேரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி குன்றத்தூரிலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் - அனகாபுத்தூர் பைபாஸ் சர்வீஸ் சாலை அருகே ஏரிக்கரை சந்திப்பு மற்றும் திருநீர்மலை ஏரிக்கரை சாலை சந்திப்பில் இருந்து மதுரவாயல் பைப்பாஸ் சர்வீஸ் சாலை நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒரகடம் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வரும் கனரக வாகனங்கள் - முடிச்சூர் சாலை மற்றும் வெளிச்சுற்றுச் சாலை சந்திப்பில் இருந்து வெளிச்சுற்றுச்சாலை நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் - மேடவாக்கம் மார்க்கமாக வேளச்சேரி நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரவாயலிலிருந்து சென்னைக்கு வாகனங்கள் இரும்புலியூர் சந்திப்பில் இருந்து பெருங்களத்தூர் நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் - செங்கல்பட்டிலிருந்து சிங்கப்பெருமாள் கோயில் நோக்கியும், வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை வழியாக படப்பை நோக்கியும், வண்டலூர் பழைய பாலம் வழியாக வாலஜாபாத் சாலை நோக்கியும் செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
