ஸ்பைடர் மேன் போல் மாடி விட்டு மாடி.. இரவோடு இரவாக 9 லட்சம்.. கல்லாவை கழுவிய கள்வன் | Theft |Chennai

x

சென்னை தி நகர்ல இருக்குற பிரபல ஜவுளிகடைக்குள்ள புகுந்து 9 லட்சத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு.... மாடி விட்டு மாடி தாவிய ஸ்பைடர் மேன் கொள்ளையன் சிக்குவாரா?

கோவையில் பிரபல நகைக்கடைக்குள் இரவோடு இரவாக இறங்கி தங்கம் வெள்ளி பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டோம்...

மனைவி நர்மதா ஸ்கெட்ச் போட்டுக்கொடுக்க அந்த அசாதாரணமான கொள்ளையை அசால்டாக செய்து முடித்தார் பலே திருடன் விஜய்... ஏசி வெண்டிலேட்டர் வழியாக ப்ளோருக்குள் குதித்து கடையை சூறையாடினார்.

கோவை மாவட்டத்தை அதிரவைத்த அந்த பகீர் சம்பவத்தை போலவே, சென்னையில் உள்ள ஒரு பிரபல ஜவுளிகடையில் கள்ளாவிலிருந்து 9 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

கோவையை போலவே இங்கும் ஏசிவெண்டிலேட்டர் வழியாக கடைக்குள் புகுந்து பணத்தை அபேஸ் செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை தி நகர் நாகேஷ்வரா சாலையில் அமைந்துள்ளது பிரபல ஜவுளி. இந்த கடைக்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள்.

இந்த நிலையில் தான் சம்பவத்தன்று வியாபரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்ற ஊழியர்கள் மறு நாள் காலை வழக்கம் போல கடையை திறந்துள்ளனர்.

நான்காவது மாடிக்கு சென்ற போது பால் சீலிங் உடைக்கப்பட்டு கடையே அலங்கோலமாக கிடந்திருக்கிறது. உடனே கல்லாப்பெட்டியை சோதனை செய்திருக்கிறார்கள். அங்கு தான் அவர்களுக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.

கல்லாவில் இருந்த ஒன்பது லட்சம் ரூபாய் பணம் காணாமல் போயிருக்கிறது. அடுத்த கணமே கடையின் காசாளர் அஜித் மாம்பலம் போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்திருக்கிறார்கள்.

அதில் இரண்டு மர்ம நபர்கள் சினிமா பாணியில் பின் வழியாக குமரன் சில்க்ஸ் கட்டிடத்திற்குள் புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்து ஒன்பது லட்சம் ரூபாய் கொள்ளையடித்ததை உறுதி செய்தனர்.

இவர்கள் எப்படி கடையின் உள் நுழைந்தார்கள்? ஏற்கனவே நோட்டமிட்டு கொள்ளையடித்தார்களா? அல்லது கடையிலேயே ஒளிந்திருந்து கொள்ளையில் ஈடுபட்டனரா? போன்ற பல்வேறு கோணங்களில் மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி இருக்கிறார்கள்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் போலீசாருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது.

முதலில் கொள்ளையன் பக்கத்து ஜவுளி கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்டு ஏசி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே சென்று, பின் அங்கு சிசிடிவி கேமராக்களை கண்டதும் ப்ளானை கைவிட்டிருக்கிறார்.

அதனை தொடர்ந்து பக்கத்து மாடிக்கு தாவி இந்த கடையின் நான்காவது மாடி பால்சீலிங்கை உடைத்து ஏசி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே சென்று பணத்தை கொள்ளையடித்திருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

குறிப்பாக கடை மூடும் போது மெயின் ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு சென்றதால் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் போயிருக்கிறது,. இதனை தெரிந்து கொண்டே கொள்ளையன் எளிதாக இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும் பக்கத்து ஜவுளி கடையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் எளிதாக கடைக்குள் புகுந்து, அங்கிருந்து ஸ்பைடர் மேன் போல மாடி விட்டு மாடி தாவி கொள்ளையடித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்