Chennai | TN Police | கூலிப்படையை ஏவி மனைவி மீது கொலைவெறி தாக்குதல் - ஸ்கெட்ச் போட்டு கொடுத்த கணவன்

x

சென்னையில் கூலிப்படையை ஏவி மனைவி மீது கொலைவெறி தாக்குதல் - ஸ்கெட்ச் போட்டு கொடுத்த கொடூர கணவன்

மனைவி மீது தாக்குதல் நடத்த கூலிப்படையை ஏவிய கணவர்

சென்னை சூளைமேட்டில் வெளிநாட்டில் இருந்து ஆட்களை ஏவி மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட கணவர்

சூளைமேடு பகுதியை சேர்ந்த பெனாசீர் பேகம் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் ஜாகிர் உசேனை பிரிந்து வாழ்கிறார்

இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது

கடந்த 2-ம் தேதி பெனாசிர் பேகம் வீட்டருகே சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வந்து இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பியோடினர்

சிசிடிவி காட்சிகளை வைத்து தாக்குதல் நடத்திய தஞ்சையை சேர்ந்த வினோத் மற்றும் முகமது ஆதில் ஆகிய இருவர் கைது

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் துபாயிலிருக்கும் ஜாகிர் உசேன் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது


Next Story

மேலும் செய்திகள்