Chennai | TN Police | 6வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை... சென்னையை உலுக்கிய சம்பவம்

x

சென்னை கோயம்பேட்டில் 6வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதி திலீப் - சுவாதி. இவர்களின் 4 வயது ஆண் குழந்தை 6-வது மாடியில் உள்ள வீட்டு ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிகிறது. தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்