பெட்ரோல் பங்க் இருந்த இடத்தில் தீ விபத்து : பள்ளி, மருத்துவமனை அருகில் இருந்ததால் பரபரப்பு

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் இருந்த இடத்தில் தீப்பற்றியதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
பெட்ரோல் பங்க் இருந்த இடத்தில் தீ விபத்து : பள்ளி, மருத்துவமனை அருகில் இருந்ததால் பரபரப்பு
Published on

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் இருந்த இடத்தில் தீப்பற்றியதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். அந்த சாலையில், ஏற்கனவே பெட்ரோல் பங்க் செயல்பட்டு வந்தது. தற்போது காலியாக உள்ள அந்த இடத்தில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. அந்த இடத்தில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. தீப்பற்றிய இடத்திற்கு அருகில் பள்ளிகள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க் இருப்பதால், அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என அச்சமடைந்த மக்கள், தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள், ஒரு மணி நேரமாக போராடி, தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com