மின்மாற்றியில் திடீர் தீ விபத்து : மக்கள் அலறி அடித்து ஓட்டம்

சென்னை திருவொற்றியூரில் மின்மாற்றியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
மின்மாற்றியில் திடீர் தீ விபத்து : மக்கள் அலறி அடித்து ஓட்டம்
Published on

சென்னை திருவொற்றியூரில் மின்மாற்றியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். திருவொற்றியூர் எல்லையம்மன்கோவில் அருகே உள்ள மின்மாற்றியில் மின்சாரம் கசிந்து திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து மின்சாரப்பெட்டியில் தீப்பற்றி எரிந்து, கரும்புகை வெளியேறியுள்ளது. இதனால் டிரான்ஸ்பார்மர் வெடித்து விடுமோ என்கிற அச்சத்தில் மக்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அவசர நிலையை உணர்ந்த மெட்ரோ ரயில் ஊழியர்கள், தீயணைப்பான் கொண்டு, தீயை உடனடியாக அணைத்தனர். ஏ.சி மற்றும் குளிர்சாதன பெட்டி அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், உயர் அழுத்தம் ஏற்பட்டு, இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படுவதாக மின்துறை சார்ந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com