Chennai Theft | சூப்பர் மார்க்கெட்டில் திருடிய காவலாளி | கையும் களவுமாக சிக்கிய பரபரப்பு வீடியோ

x

சூப்பர் மார்க்கெட்டில் பெண் ஊழியரின் நகையை காவலாளி திருடியதாக புகார்

சூப்பர் மார்க்கெட் காவலாளி பெண் ஊழியரின் தங்க நகையை திருடியதாக வீடியோவில் சிக்கியுள்ளார். சென்னை அடுத்த பழைய பெருங்களத்தூர் கிருஷ்ணாநகரை சார்ந்த கவுசல்யா என்பவர், பெருங்களத்தூர்- முடிச்சூர் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறார். இவர், தனது தாயாரிடம் கொடுப்பதற்காக 4 கிராம் தங்கச் செயினை சாப்பாடு பையில் வைத்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணி முடித்து வீடு திரும்பும்போது பையில் நகை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவலாளி மீது சந்தேகம் அடைந்த அவர், அதுகுறித்து கடை உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காவலாளி ஆறுமுகம், கவுசல்யாவின் பையை எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் கவுசல்யா சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்