Chennai ``திருடிய நபரிடமே சென்று செல்போனை விற்ற திருடன்’’ கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்
சென்னையில் திருடிய செல்போனை உரிமையாளரிடமே விற்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் கடை நடத்தி வரும் உமாசங்கரின் செல்போன் திருடு போயுள்ளது. எங்கு தேடியும் கிடைக்காததால், அவர் தனது வியாபாரத்தை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த நபர்கள் சிலர், அவசர தேவைக்கு செல்ஃபோனை விற்க வேண்டும் என கூறி, அவரிடமே அவருடைய செல்போனை விற்பனைக்காக கொடுத்துள்ளனர். இது தனது செல்போன் தான் என்பதை அறிந்த உமாசங்கர், திருடனை பிடித்து கோயம்பேடு போலீசில் ஒப்படைத்துள்ளார். விசாரணை மேற்கொண்ட போலீசார், சென்னை சேர்ந்த சந்தோஷ் என்ற திருடனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
