``இவ்ளோ நாளா லவ் பண்ணிட்டு இருந்தது தங்கச்சியவா?’’ `பாயாசம்’ போட்ட காதலி.. பறிபோன காதலன் கிட்னிகள்

x

காதலி, எலி மருந்து கலந்து கொடுத்த தேநீரை குடித்த காதலன், சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயசூர்யா என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்த நிலையில், சகோதர உறவு முறை எனக் கூறி, இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த பெண்ணை ஜெயசூர்யா தவிர்த்து வந்த நிலையில், அவருக்கு காதலி தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த தேநீரை குடித்த ஜெயசூர்யா சிறுநீரகங்கள் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்