Chennai | கடைசியாக மகன் சொல்லி சென்ற வார்த்தை பிணமாக வீடு திரும்பிய அதிர்ச்சி...சென்னை சோகம்
சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில், சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, அவரது தாயார் தெரிவித்துள்ளார். ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த நாகராஜ் என்பவரின் 14 வயது மகன் பரமசிவன், கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றுவிட்டு, வீடு திரும்பாததால் அது குறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்நிலையில், நந்தம்பாக்கம் பாண்டி முனீஸ்வரர் ஆத்து கோவில் அருகே உள்ள 70 அடி ஆழ கிணற்றில் மிதந்த சிறுவனின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story