

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே பிறந்து சிலமணி நேரத்தில், முட்புதரில் வீசப்பட்ட ஆண் குழந்தையை, தகவலின் பேரில் வந்து ஆம்புலன்ஸில் மீட்டுச் சென்றனர். கேளம்பாக்கம் சாலையில் துணியில் சுற்றியபடி அழுத குழந்தை குறித்து பூங்கா ஊழியர்கள் தகவல் அளித்ததின் பேரில் மீட்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் ஆள் அரவமின்றி இருந்ததை பயன்படுத்தி குழந்தையை வீசியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.