சென்னையில் டெலிவரி ஊழியர்களுக்கு குட் நியூஸ் - இனி ஏசியில் ஓய்வெடுக்கலாம்

x

உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்காக சென்னையின் சாலையோரங்களில் ஏசி ஓய்வறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது சோதனை முறையில் அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் டெலிவரி சேவைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்