மகளை காணவில்லை என புகார் கொடுத்த தந்தை - புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் விபரீதம்

மகளை காணவில்லை என புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத விரக்தியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவல் நிலையம் முன் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மகளை காணவில்லை என புகார் கொடுத்த தந்தை - புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் விபரீதம்
Published on

சென்னை சேலையூர் அருகே உள்ள காமராஜபுரம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் 13 வயது மகள் கடந்த வாரம் மாயமான நிலையில் அவரை அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் ஒருவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதனிடையே தன் மகளை மீட்டுத் தருமாறு சேலையூர் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர், திடீரென சேலையூர் காவல் நிலையம் முன் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து ஆபத்தான நிலையில் அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த முயற்சி

மின்சாரம் தாக்கி 2 தொழிலாளிகள் பலியான சோகம்

X

Thanthi TV
www.thanthitv.com