மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில், திங்கள் முதல் சனிக் கிழமை வரை கூடுதல் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
Published on
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, சென்னையில், அரசு ஊழியர்களுக்காக குறைந்த பட்ச ரயில் சேவைகள் தொடங்கினர். அதைத் தொடர்ந்து, வேலைக்கு செல்லும் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தினமும் 500 சர்வீஸ் என்ற அடிப்படையில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனிடையே, வரும் 4ஆம் தேதி முதல் கூடுதலாக 160 சர்வீஸ் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இந்த கூடுதல் சேவை இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com