கல்லூரி மாணவர்கள் கையில் பயங்கர ஆயுதங்கள் - மாணவர்கள் 12 பேரிடம் தீவிர விசாரணை

சென்னையில் கலவரத்தில் ஈடுபட வந்த கல்லூரி மாணவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களை போலீசார் முன்கூட்டியே பறிமுதல் செய்ததோடு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர்கள் கையில் பயங்கர ஆயுதங்கள் - மாணவர்கள் 12 பேரிடம் தீவிர விசாரணை
Published on

கடந்த மாதம் புழல் பகுதி அருகே பச்சையப்பன் கல்லூரி மற்றும் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு பதில் கொடுக்கும் விதமாக அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் இன்று காலை முதல் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்தனர். அப்போது திடீரென மோதல் ஏற்பட்டதில் மாணவன் ஒருவருக்கு லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடனே சுதாரித்து கொண்ட போலீசார் மாணவர்களை சுற்றி வளைத்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். 12 மாணவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com