

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான கோவேக்சின் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து உள்ளன. இந்த மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதனை செய்ய, இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்களத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் தேர்வானது. இதனைத் தொடர்ந்து, அங்கு 30 தன்னார்வலர்களை கொண்டு முதற்கட்ட பரிசோதனை கடந்த ஜூலை மாதம் நடந்தது. மேலும் 50 தன்னார்வலர்கள் கொண்டு 2-ஆம் கட்ட பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்த 2 பரிசோதனைகளும் வெற்றி பெற்ற நிலையில், 3-ஆம் கட்ட பரிசோதனை இன்று தொடங்குகிறது.