Chennai | அப்பாவை கை ஓங்கிய மகன் ரத்தவெள்ளத்தில் மிதக்க கொடூர மரணம் - சென்னை அம்பத்தூரில் அதிர்ச்சி
ஆட்டோ ஓட்டுநர் கழுத்து அறுத்து கொலை - தாய், தந்தையிடம் விசாரணை சென்னை அம்பத்தூரில் ஆட்டோ ஓட்டுநர் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீதர், தந்தை மன்மதன், தாய் கல்யாணி ஆகியோருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில், இரவு தந்தையை அடித்த ஸ்ரீதர், காலை வீட்டில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். ஸ்ரீதரின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தந்தை மன்மதன், தாய் கல்யாணி மற்றும் அக்கா உள்ளிட்ட மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
