Chennai | "வழுக்கி விட்டு குழந்தையோடு தண்ணீரில் விழுந்து.." - ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி

x

சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்காமல் காலதாமதம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொட்டிவாக்கம் பகுதியில் நாட்டோ காலனியில் கடந்த 1 வருடமாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இருவழி சாலை ஒரு வழி சாலையாக மாற்றி விடபட்டுள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடித்து, சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து கால்நடை காப்பகத்தில் விட வேண்டும் என்றும் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்