Chennai SIR Camp | சென்னையில் இன்றும், நாளையும்.. இப்பவே கிளம்புங்க மக்களே.!
சென்னையில், வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்கும் வகையில், இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத புதிய வாக்காளர்கள் மற்றும் 2026 ஜனவரி 1ம் தேதி, 18 வயது பூர்த்தி அடைய இருப்பவர்களுக்காக, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், இன்றும், நாளையும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் உரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலரிடமும் சமர்ப்பிக்கலாம் என்றும், இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
