

சென்னையில் தொழிலாளர்கள் நலன் கருதி சென்னையில் உள்ள பிரபல உணவகங்கள் சில மூடப்பட்டுள்ளன. சிறு குறு உணவகங்கள், தேனீர் கடைகள் , மளிகை கடைகள் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதே போல், காலை முதலே சென்னையில் காய்கறி மளிகை மற்றும் சிறு குறு உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில் இயங்கி வரும் பிரபல உணவகங்கள் சில கொரனோ தடுப்பு முன்னெச்சரிக்கையாக வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர் நலன் கருதி உணவகத்தின் அனைத்து கிளைகளுக்கும் விடுமுறை அளித்துள்ளனர்