chennai || ஆட்டோ ஓட்டுநரின் அதிர்ச்சி செயல் - சென்னையில் கொடூரம்

x

சென்னையில் பள்ளி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து தலைமறைவான ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

சித்தப்பா வீட்டிற்கு சென்று விளையாடி விட்டு, தனது வீட்டிற்கு புறப்பட்ட 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை, நீலகண்டன் என்ற ஆட்டோ ஓட்டுனர், வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி நடந்ததை பெற்றோரிடம் தெரிவிக்க, தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி, ஆட்டோ ஓட்டுநர் நீலகண்டன் மீது போக்சோவில் வழக்குபதிந்த போலீசார், தீவிரமாக தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்