Chennai | அதிர்ந்த `தோட்டம் சேகர்’ கொலை-20 வருடம் காத்து பழிதீர்த்த 3வது மனைவி-யார் இந்த அழகு ராஜா?
தலைநகர் அதிர்ந்த `தோட்டம் சேகர்’ கொலை
2 வயதிலிருந்தே மகனுக்கு கொலைவெறி ஊட்டி
20 வருடம் காத்து பழிதீர்த்த 3வது மனைவி
கேங்ஸ் ஆஃப் ஜாம்பஜார்...
யார் இந்த அழகு ராஜா?
காவல்துறையினரால தேடப்பட்டு வந்த கொலைகாரன ஸ்பெசல் டீம் ஆந்திரா highway-ல TraceOut பண்ணி இருக்காங்க.
குற்றவாளி காவல்துறையினர் கிட்ட இருந்து ஜஸ்ட் மிஸ்ஸாகிருந்தாலும்,
நெடுஞ்சாலையில நடந்த லைவ் சேசிங் வீடியோ வெளியாகி
காவல்துறையினருக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்க வெச்சிருக்கு...
மின்னல் வேகத்தில் சீறிபாய்ந்த காரின் கதவில் தொங்கியபடி ஒருகிலோ மீட்டர் தூரம் சேஸ் செய்த காவலரின் கையில் அந்த கொலைக்காரன் முரட்டுத்தனமாக குத்தியுள்ளார்.
ஒருகட்டத்தில், கதவின் பிடியை இழந்த காவல் ஆய்வாளர் சாலையில் விழுந்து உருண்டுள்ளார்.
நூழிலையில் உயிர் பிழைத்தோம் என்கிற நினைப்பை விட, நூழிலையில் கொலைக்காரனை தவறவிட்டுவிட்டோமே என்கிற ஏமாற்றமே அவரிடம் மேலோங்கி இருந்தது. டூவிலரில் தன்னை பின் தொடர்ந்து வந்த மற்ற காவலரிடம் என்னைவிட்டுவிட்டு கொலைக்காரனை சேஸ் செய்யுமாறு இன்ஸ்பெக்டர் சைகை செய்த வீடியோ வெளியாகி பொதுமக்களிடம் பாராட்டை பெற்று வருகிறது.
தன்னுடைய உயிரையே பணயம் வைத்து குற்றவாளியை பிடிப்பதற்காக விடாமுயற்சியோடு போராடிய காவல் ஆய்வாளரின் பெயர் ஆனந்தகுமார்.
அவர் விரட்டிச் சென்ற குற்றவாளியும் சாதாரண நபர் கிடையாது.
2 வயதிலிருந்தே தாய் பாலிற்கு பதிலாக கொலைவெறியை ஊட்டி வளர்க்கப்பட்ட Notorious criminal லான அழகுராஜா என்பவரை சேஸ் செய்தபோது தான் இந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.
யார் இந்த அழகுராஜா ? அவரை தற்போது தனிப்படையினர் தேடி வர என்னக்காரணம் என்பதை தெரிந்துக்கொள்ள கடந்த காலத்தில் நடந்த குற்ற சம்பவங்களை வேகமாக புரட்டினோம்.
1990 களின் முடிவில்... தோட்டம் சேகர்... மயிலாப்பூர் சிவக்குமார்.. அயோத்தி குப்பம் வீரமணி... மார்க்கெட் முரளி இந்த பெயர்களை தெரியாத காவல்துறையினரும், அரசியவாதிகளும் கிடையாது என சொல்லும் அளவிற்கு தலைநகர் சென்னையில் செல்வாக்கு மிகுந்தவர்களாக வலம் வந்துள்ளனர்.
இதில், தோட்டம் சேகருக்கு அதிமுகவிலும், அவர் வசித்த ஜாம்பஜார் பகுதியிலும் அதிக செல்வாக்கு இருந்துள்ளது. அதுமட்டுமின்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்றவராகவும் தோட்டம் சேகர் வலம் வந்த காரணத்தால் அவருக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த காலக்கட்டத்தில் பரவலாக பேசப்பட்டது.
கட்சிக்குள்ளும், ஏரியாவிலும் தோட்டம் சேகரின் வளர்ச்சியை விரும்பாத மயிலாப்பூர் சிவக்குமார், அவருடைய ஆதரவாளரான அயோத்தி குப்பம் வீரமணி மற்றும் மார்க்கெட் முரளியை கூட்டு சேர்த்து கடந்த 2001 செப்டம்பர் 22 ம் தேதி தோட்டம் சேகரை தீர்த்துக்கட்டியுள்ளார்.
சேகரின் கொலை வழக்கில் 10 பேர் கைதான நிலையில் அயோத்தி குப்பம் வீரமணியை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
எனினும், தன்னுடைய கணவரின் கொலைக்கு முக்கிய காரணமான மயிலாப்பூர் சிவக்குமாரையும், மார்க்கெட் முரளியையும் தீர்த்துக்கட்ட வேண்டுமென தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவி சபதம் எடுத்து அதற்காக அவருடைய மகன் அழகுராஜாவை தயார் படுத்த தொடங்கியுள்ளார். இந்த சம்பவம் நடக்கும் போது அழகுராஜாவின் வயது வெறும் இரண்டு.
இருபது வருடமாக தந்தையை கொலை செய்த சிவக்குமாரை தீர்த்துக்கட்ட வேண்டுமென்பதையே தன்னுடைய வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்த அழகுராஜா, கடந்த 2021 ம் ஆண்டு கூட்டாளிகளோடு சேர்ந்து மயிலை சிவக்குமாரின் கதையை முடித்துள்ளார்.
இதற்கிடையே மார்க்கெட் முரளியை வேறொரு முன்விரோதத்தில் புல்லட் குமரன் என்கிற மற்றொரு ரவுடி கொலை செய்துவிட்ட காரணத்தால் அந்த வாய்ப்பு அழகுராஜாவின் கைநழுவி சென்றுள்ளது. எனினும் புல்லட் குமரன் வெறும் அம்பு மட்டுமே அதை எய்தது தோட்டம் சேகரின் மனைவி மலர்கொடி தான் என்றும் சொல்லப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அழகுராஜாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில் அழகுராஜாவின் தாய் மலர்கொடியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாம் சப்ளையர் என்கிற குற்றச்சாட்டுக்குள்ளாகி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
இந்த சூழலில் தான் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அழகுராஜா காவல்துறையினருக்கு தண்ணீர் காட்டிவிட்டு மற்றொரு குற்ற சம்பவத்திற்கு தயாராகி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அழகுராஜா திடீரென தலைமறைவான காரணத்தால் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக அவரை கைது செய்ய வேண்டுமென காவல்துறையினர் அலர்ட் ஆகி இருக்கிறார்கள்.
அழகுராஜாவை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் வியாழக்கிழமை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான ஸ்பெஷல் டீம்க்கு அழகுராஜா திருப்பாச்சூர் அருகிலிருந்து திருப்பதி ஹைவேயில் சென்று கொண்டிருக்கும் தகவல் கிடைத்துள்ளது.
மஃப்டீயில் விரைந்த சென்ற காவல்துறையினர் அவரை ரகசியமாக நோட்டமிட்டு கைது செய்ய முயன்றிருக்கிறார்கள். காவலர்கள் சுத்துப்போட்டிருப்பதை உணர்ந்ததும் அழகுராஜா அவருடைய காரில் ஏறி எஸ்கேப் ஆகி உள்ளார். எனினும் அந்த காரை விடாமல் துரத்தி சென்ற இன்ஸ்பெக்டர், காரின் கதவில் தொடங்கியபடி வண்டியை நிறுத்த முயன்றுள்ளார்.
நூலிழையில் அழகுராஜா தப்பிவிட, சாலையில் உருண்டு விழுந்த இன்ஸ்பெக்டரும் நூழிலையில் உயிர் பிழைத்துள்ளார். அழகுராஜாவை பிடிப்பதற்கு மேலும் இரண்டு தனிப்படைகள் அமைத்துள்ள காவல்துறையினர் அவரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
