Chennai | சென்னையில் போராடிய ஆசிரியர்களுக்கு ஷாக்
சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 650 இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 10வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அனுமதி இன்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
