Chennai | ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. அலேக்காக இளைஞரை தூக்கிய போலீசார்..
சென்னை கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் ஸ்கேன் எடுக்கச் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். புழல் பகுதியை சேர்ந்த 47 வயது பெண் தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்றபோது அங்கு பணியில் இருந்த இளைஞர் அத்துமீறலில் ஈடுபட்டதாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று ஜில் கவின் என்ற அந்த இளைஞரை கைது செய்தனர். அவர் மீது, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
