மனைவி கண் எதிரே ரவுடி வெட்டி கொலை : 6 பேரை கைது செய்த போலீசார்

சென்னை, திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் பட்டப்பகலில் மனைவி கண் எதிரே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மனைவி கண் எதிரே ரவுடி வெட்டி கொலை : 6 பேரை கைது செய்த போலீசார்
Published on
சென்னை, திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் பட்டப்பகலில் மனைவி கண் எதிரே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வெட்டி கொலை செய்யப்பட்ட ரவுடி பாண்டியன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், சின்ன பாளையத்தை சேர்ந்த பாண்டியமணி என்பவர் கொலை வழக்கிலும், திருவெற்றியூரில் சுப்பிரமணி என்பவர் கொலை வழக்கிலும் முக்கிய குற்றவாளி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பாண்டியன் தனது வீட்டில் இருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இது குறித்து வழக்கு பதிவு செய்த எண்ணூர் போலீசார் , திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கங்காதரன், அருண்ராஜ், மோகன், பிரபாகரன், சரண், மோகன்ராஜ் ஆகிய 6 பேரை கைது செய்து செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com