நண்பர்களை வைத்து வழிப்பறி செய்த இளைஞர் - வீடு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்

சென்னையில் தன் பணத்தை வழிப்பறி செய்த‌தாக புகார் கொடுத்த இளைஞர், போலீசார் வசம் சிக்கியுள்ளார்.
நண்பர்களை வைத்து வழிப்பறி செய்த இளைஞர் - வீடு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்
Published on

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த மகேஷ் என்பவர் தரமணி ராஜீவ்காந்தி சாலையில் வந்த போது 3 பேர் தன்னை வழிமறித்து, செல்போன், ஸ்கூட்டி, தங்க சங்கிலியை பறித்து சென்றதாக புகார் செய்தார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார்,பள்ளிக்கரணையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வெங்கடேசனை பிடித்து விசாரித்தனர். அப்போது, தரமணியில் வீடு பார்த்து தருவதாக கூறி மகேஷ் தன்னிடம் இருந்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றியதாகவும் அதற்கு பழிவாங்க தன் நண்பர்களை வைத்து வழிப்பறி செய்த‌தாகவும் வெங்கடேசன் கூறியுள்ளார். இதையடுத்து, மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேசன், சதீஷ், பாரதி ஆகியோர் மீதும், வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் மகேஷ் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், 4 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

--

X

Thanthi TV
www.thanthitv.com