சென்னை மக்களே ரெடியா - வெளியானது சூப்பர் அறிவிப்பு

சென்னை மாநகரின் பராம்பரிய கட்டிடங்களில் ஒன்றான, 111 ஆண்டுகள் பழைமையான ரிப்பன் மாளிகையை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னைக் மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, ரிப்பன் மாளிகையை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் தனி நபராகவோ, அல்லது கல்வி சுற்றுலா வர விரும்பும் கல்வி நிறுவனங்களின் மூலம் மின்னஞ்சல் அல்லது வாட்ஸப் மூலம் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும், ரிப்பன் மாளிகையின் கட்டுமானம் மற்றும் மாநகராட்சி செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள இந்த திட்டம் வகை செய்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com