Chennai | Train | நாளை முதல் அதிரடி மாற்றம் | சென்னை மக்களே முன்னாடியே பிளான் பண்ணிக்கோங்க..
Chennai | Train | MTC Bus | நாளை முதல் அதிரடி மாற்றம் | சென்னை மக்களே முன்னாடியே பிளான் பண்ணிக்கோங்க.. #chennai #suburbantrain #Egmore #mtcbus #thanthitv எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு - கூடுதல் பேருந்துகள் இயக்கம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. எழும்பூர் நிலையத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகளால், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவை பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ராயபுரம், கிளாம்பாக்கம், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வழித்தடங்களில் இந்த சேவை வழங்கப்பட உள்ளன.
