Chennai | Real Estate | தினத்தந்தி - காசாகிராண்ட் இணைந்து நடத்தும் ரியல் எஸ்டேட் கண்காட்சி
Chennai | Real Estate | சென்னையில் வீடு வாங்குவோருக்கு அறிய வாய்ப்பு.. தினத்தந்தி - காசாகிராண்ட் இணைந்து நடத்தும் ரியல் எஸ்டேட் கண்காட்சி 'உங்கள் முகவரி PROPERTY FAIR 2026' என்ற பெயரில் தினத்தந்தி - காசாகிராண்ட் இணைந்து நடத்தும் 3 நாள் ரியல் எஸ்டேட் கண்காட்சி, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியது. தினத்தந்தி மற்றும் காசாகிராண்ட் இணைந்து நடத்தும் இந்த பிராபர்ட்டி ஃபேர், ஆதித்யராம் பிராபர்ட்டிஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் நடைபெறுகிறது. இதனை காசாகிராண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் அசோக் தொடங்கி வைத்தார். சிறப்பு விருத்தினர்களை தினத்தந்தி விளம்பரப் பிரிவுத் தலைவர் சரவணன் பூங்கொத்து தந்து வரவேற்றார். வரும் 16-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், 40-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமையவுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் மனைப் பிரிவுகள் குறித்த விவரங்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்றும், முன்னணி வங்கிகள் மூலம் உடனடியாக வீட்டுக் கடன் பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சொந்த வீடு மற்றும் நிலம் வாங்க விரும்புவோருக்கு இக்கண்காட்சி ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
