Chennai | Rash Driving | போதையில் காரில் பறந்த இளைஞர், இளம்பெண் - பைக்குகள் மீது தாறுமாறாக மோதல்..
#Chennai #RashDriving #CarAccident #TNPolice #ViralVideo #ThanthiTV Chennai | Rash Driving | சரக்கோடு காரில் பறந்த இளைஞர், இளம்பெண் - போதையில் பைக்குகள் மீது தாறுமாறாக மோதல்.. சென்னையில் அதிர்ச்சி சென்னையில் நள்ளிரவில் மது போதையில் சொகுசு காரை ஓட்டி, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது இளைஞர், இளம்பெண் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யானைக்கவுனி பகுதியில் நள்ளிரவு 12 நடந்த இந்தச் சம்பவத்தில், கேரளாவைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் ஓட்டிய கார், பல வாகனங்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் காரை நிறுத்தாமல் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சென்றதால், பொதுமக்கள் பின்தொடர்ந்து பேஷன் பிரிட்ஜ் அருகே காரை மடக்கிப் பிடித்தனர். காரைச் சோதனையிட்ட போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்த நிலையில், காரின் முன்பகுதியில் உணவு மற்றும் மதுவை வைத்துக்கொண்டு இளைஞர் மற்றும் இளம்பெண் பயணித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்கள் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், புகார்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
