Chennai Railway Station | மேற்குவங்கத்தில் இருந்து ரயிலில் வந்த பொருள்.. ரயில்வே ஸ்டேஷன் அதிர்ச்சி
மேற்குவங்க மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
ஹவுரா - திருச்சி சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, பயணிகளின் உடைமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். இதில், திரிபுராவை சேர்ந்த முகமது அல் அமீன் என்பவர், சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான 18 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
