Chennai | Puzhal Prison | சரித்திர பதிவேடு குற்றவாளி கடத்தல் - புழல் சிறை வாசலிலேயே துணிகர சம்பவம்..
Chennai | Puzhal Prison | சரித்திர பதிவேடு குற்றவாளி கடத்தல் - புழல் சிறை வாசலிலேயே துணிகர சம்பவம்.. போலீசார் அதிரடி சென்னை புழல் சிறை வாசலில் இருந்து சரித்திர பதிவேடு குற்றவாளியை காரில் கடத்திய சம்பவத்தில், 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தீவுத்திடல் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமினில் வெளியே வந்தபோது, முன்விரோதம் காரணமாக அவரை காரில் ஏற்றிச் சென்ற கும்பல், கத்தி முனையில் மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், புழல் போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாமல்லபுரத்தில் பதுங்கியிருந்த பாலாஜி, வினோத், தேன்மொழி, மோகனா ஆகிய 4 பேரை கைது செய்தனர். கஞ்சா விற்பனை மற்றும் மாமூல் வசூல் தகராறில் கடத்தல் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
