திடீரென மயங்கி விழுந்த பெண் - கலை இயக்குனர்கள் போராட்டத்தில் பரபரப்பு

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலை இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகத்தை கண்டித்து உறுப்பினர்கள் தொடர் உண்ணாவிரத உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்... வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தின் போது உறுப்பினர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... எந்த ஒரு காரணமும் இல்லாமல் உறுப்பினர்களை நீக்குவதாகவும், சங்கத்தில் சேர்ந்தால் தான் பணி எனக்கூறி கட்டாயப்படுத்தி பணம் வாங்கி விட்டு, வெளியாட்களுக்குப் பணிகள் வழங்குவதாகவும், உறுப்பினர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு சங்கத்தின் பெயரை பயன்படுத்தி உறுப்பினர்களை பழிவாங்கும் நோக்கத்தில் நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி அரசு தலையிட வலியுறுத்தி போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com