Chennai Port "முழு நேர அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த 14 பேர் உயிரிழப்பு "-பரபரப்பு தகவல்
"முழு நேர அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த 14 பேர் உயிரிழப்பு " - பரபரப்பு தகவல்
சென்னை துறைமுகத்தில் முழு நேர அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து கடந்த 30 ஆண்டுகளாக வேலைக்காக காத்திருந்த14 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக துறைமுக முழு நேர பயிற்சி பணியாளர்கள் நலச்சங்கம் நிர்வாக குழு உறுப்பினர் சூசை தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை துறைமுகத்தில் பணிக்கு ஆட்களை சேர்ப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், அம்பானி, அதானி போன்றவர்களுக்கு இன்னும் எத்தனை துறைமுகத்தை கொடுக்க மத்திய அரசு தயாராகி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் சென்னை துறைமுகத்தை முற்றுகையிட்டு சாகும் வரை மறியல் போராட்டத்தை நடத்த போவதாகவும் எச்சரித்துள்ளார்.
