கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கணவன் வீட்டின் முன் பெண் தர்ணா போராட்டம்

சென்னை பூந்தமல்லி அருகே கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி அவரது வீட்டின் முன் பெண் ஒருவர் கைக் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கணவன் வீட்டின் முன் பெண் தர்ணா போராட்டம்
Published on

கரையான்சாவடியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி காஞ்சனா. இருவருக்கும் கீர்த்திகா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன் மணிகண்டன், மது அருந்திவிட்டு அடித்து துன்புறுத்தி உள்ளார். கணவனுக்கு பாடம்புகட்ட நினைத்த காஞ்சனா, தாய் வீட்டுக்கு சென்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு கணவன் வீட்டுக்கு திரும்பிய அவரை, மணிகண்டன் மீண்டும் மது போதையில் அடித்து துன்புறுத்தியுள்ளார். வீட்டையும் பூட்டி விட்டு சாவியை எடுத்துச் சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த காஞ்சனா, கணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி, வீட்டு முன்பு அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், அந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com